Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சீனாவில் சர்வதேச பல்கலைக்கழகம் சார்பில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள உள்ள திருச்சி வீராங்கனைக்கு பாராட்டு விழா.

0

'- Advertisement -

 

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் சீனாவில் சர்வதேச பல்கலைகழகம் சார்பில் நடைபெறவுள்ள தடியூன்றி தாண்டுதல் விளையாட்டு போட்டியில் இந்திய நாட்டின் சார்பில் கலந்து கொள்ள உள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீராங்கனை சத்தியா அவர்களுக்கும் மற்றும் திருச்சி மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக இலவசமாக மாணவ மாணவிகளுக்கு தடகளம் மற்றும் நீளம் தாண்டுதல் விளையாட்டு பயிற்சிகளை இலவசமாக அளித்து வரும் அஞ்சல் துறையில் பணியாற்றி வரும் தடகள பயிற்ச்சியாளர் முணியாண்டி அவர்களுக்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கொளரவ *தலைவருமான நீதியரசர் எம். கற்பகவிநாயகம் *வழிகாட்டுதலின்படி அமைப்பின் நிறுவனர்
ஆர்.கே.குமார் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர் வி. எச்.சுப்ரமணியம் ஆகியோரின் ஆலோசனை படியும் இந்நிகழ்வு நடைபெற்றது

சீனாவில் சர்வதேச அளவில் வருகிற ஜூன் 28 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ள சர்வதேச பல்கலைக்கழகம் சார்பில் (பால் வால்ட்) தடியூன்றி தாண்டுதல் போட்டி நடைபெறவுள்ளது இப்போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகி செல்ல உள்ள திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பி.ஏ.ஆங்கிலம் 2ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவி த. சத்தியா (பால் வால்ட்) தடியூன்றி தாண்டுதல் விளையாட்டு வீரங்கனைக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது

நமது இந்திய நாட்டின் சார்பில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ள அவர் பதக்கம் வென்று வர அவருக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

விளையாட்டு வீராங்கனை சத்யா பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களிடையேயான மற்றும் ஓபன் நேஷனல் (பால் வாலட்) தடியூன்றி தாண்டுதல் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம்,வெள்ளி உள்ளிட்ட பல்வேறு பதகங்கள் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச பல்களைகழங்களுக்கான இடையேயான போட்டிக்கு இந்தியா சார்பில் கலந்த தேர்வாகியுள்ளது நமது தமிழகத்திற்கும், திருச்சிக்கு கிடைத்த பெருமையாக கருதப்படுகின்றது. இந்நிலையில் இவரது பயண செலவு மற்றும் பயிற்சிக்கு தேவையான அனைத்து செலவுகளையும் இவரது பெற்றோர் செய்து வரும் நிலையில் இதுபோன்ற விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகும் விளையாட்டு வீரர்களுக்கு மத்திய மாநில அரசு விளையாட்டு துறை சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தால் இன்னும் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற முடியும் என்றும் தன்னுடைய சாதனைகளுக்கு மத்திய அல்லது மாநில அரசு பணி வழங்கினால் தனக்கு தேவையான அனைத்து செலவுகளையும் தானே செய்து கொள்ள முடியும் என்றும் கூறினார்.

மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு மாணவ மாணவிகளுக்கு இலவசமாக தடகள விளையாட்டு மற்றும் நீளம் தாண்டுதல் விளையாட்டு பயிற்சிகளை அளித்து வரும் அஞ்சல் துறையில் பணிபுரிந்து வரும் முணியான்டி அவர்களுக்கும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது

இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் கொளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை திருச்சி மாவட்ட தலைவர் செந்தில் குமார், நரசிம்மன் நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், தடியூன்றி தாண்டுதல் தேசிய விளையாட்டு வீரரும் ரயில்வேதுறை அலுவலக கண்காணிப்பாளருமான தமிழரசன், அமைப்பின் விளையாட்டு பிரிவு செயலாளரும் தடகள பயிற்சியாளருமான சுரேஷ் பாபு , மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, ஹெப்சி சத்திய ராக்கினி, கிருபா சங்கர் விளையாட்டு பிரிவு இணைச் செயலரும் தேசிய குத்துச்சண்டை விளையாட்டு வீரருமான எழில்மணி,லதா முகேஷ், மணிவேல் பிரபு ரெங்கா ஹன்சிகா மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு, பாராட்டு சான்று வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.