திருச்சி மாவட்டத்தில் கால்பந்தாட்டத்தை வளர்க்க வேண்டும். கால்பந்து கழக பொது குழு கூட்டத்தில் தீர்மானம்.

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
திருச்சி மாவட்ட கால்பந்து கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட கால்பந்து கழக தலைவர் வீர.சிவக்குமார் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் மணிமாறன் அறிக்கை சமர்ப்பித்தார்.
துணைத் தலைவர்கள் உக்கிரமகாளி, ஷாகின்ஷா, பஷீர் அகமது, ரகுபதி, உதவி செயலாளர் ராஜமாணிக்கம், பால்ராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக இந்திய தடகள வீரர் அண்ணாவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் சங்கத்தின் சார்பில் அதிக அளவில் லீக் போட்டிகளை நடத்த வேண்டும்,
திருச்சி மாவட்டத்தில் கால்பந்தாட்டத்தை வளர்க்க பணிகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

