திருச்சியில் கஞ்சா விற்ற பெண் மற்றும் வாலிபர் கைது.
திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி விமலா (வயது 53) இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த போலீசார் விமலா வை கையும் களவுமாக பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று திருச்சி உறையூர் பங்காளி தெருவை சேர்ந்தவர் முகமது செரீப். இவரது மகன் முகமது ஆசிப் (வயது 20) இவர் தில்லை நகர் மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டு இருந்ததாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.