முசிறி
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முசிறி பகுதி அலுவலகத்தில் கூடுதல் செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் நடராஜ். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு முசிறி பைபாஸ் ரோட்டில் உள்ள நடராஜனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமானதாக கூறப்பட்ட முசிறி துறையூர் ரோட்டில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் அதிரடி சோதனை நடந்தது.
பின்னர் நடராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பிரசன்னா தலைமையில்
நடராஜ் வீட்டில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, ஏற்கனவே அவரது சொத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினர்