திருச்சி குடோனில் பதுக்கி வைத்த
ரூ.1 லட்சம் மதிப்புள்ள
புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.
திருச்சி கே.கே .நகர் அருகே உள்ள ஓலையூர் சிந்தாமணி நகரை சேர்ந்த க.சுரேஷ் குமார் (வயது48). இவருக்கு சொந்தமான குடோன் அதே பகுதியில் உள்ளது. அதில் ஹான்ஸ், கூல் லீஃப் உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மணிகண்டம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸார் சென்று குடோனில் சோதனை மேற்கொண்டதில் சுமார் 241 கிலோ எடையிலான புகையிலைப்பொருட்கள் பதுக்கியிருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சமாகும். அவற்றை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், சுரேஷ்குமார் மற்றும் திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலை பகுதியைச் சேர்ந்த க. முருகானந்தம் (வயது 22), திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த ச.இளங்கோவன் (வயது 34) ஆகிய மூவரையும் கைது செய்தனர்