நாம் முதல்வன் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளகளை நியமித்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆணை வழங்கினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் பாரதிதாசன் பல்கலைக்கழக எல்லைக்கு உட்பட்ட 8 மாவட்டங்களுக்கு நாம் முதல்வன் திட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து இன்று ஆணை வழங்கினார்.
நாம் முதல்வன் திட்டத்தின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளரும் மற்றும் பொருளியல் துறையின் உதவி பேராசிரியருமான முனைவர் வெற்றிவேல், தஞ்சை மாவட்டத்திற்கு யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரியின் கணினி அறிவியல் உதவி பேராசிரியருமான முருகானந்தம், அரியலூர் மாவட்டத்திற்கு யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளரும் அரியலூர் அரசு கலைக் கல்லூரியின் தாவரவியல் உதவி பேராசிரியருமான முனைவர் ஸ்டீபன். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளரும் TBML கல்லூரியின் வேதியல் துறையின் உதவி பேராசிரியருமான முனைவர் விக்டர் பாண்டியன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளரும் ஜேஜே கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர் தயாநிதியையும், பெரம்பலூர் மாவட்டத்திற்கு திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளரும் மற்றும் பெரியார் கல்லூரியின் தமிழ் துறை உதவி பேராசிரியருமான முனைவர் குணசேகரனையும், திருவாரூர் மாவட்டத்திற்கு மன்னார்குடி அரசு கல்லூரியின் தாவரவியல் உதவி பேராசிரியர் முனைவர் பிரபாகரனையும் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மை துறை உதவி பேராசிரியரும் மற்றும் அந்தக் கல்லூரியின் செயலாளருமான கண்ணனையும் ஒருங்கிணைப்பாளராக நியமித்து பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அ
நாம் முதல்வன் திட்டம் சிறப்பாக செயல்பட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆணை வழங்கினார்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.