திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சார்பாக போலியோ தினம்,கொரோனா விழிப்புணர்வு பேரணி.
தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போலியோ விழிப்புணர்வு பேரணி.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக போலியோ ஒழிப்பு தினம் மற்றும் கொரானா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை பெரியார் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல், திருச்சி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் தலைவர் இஞ்சினியர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை தொடக்கி வைத்தனர்.
பெரியார் கல்லூரியில் இருந்து மன்னார்புரம் வரை பேரணி நடைபெற்றது. பேரணியை திருச்சி மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் சிறப்பாக ஒருங்கிணைத்தார். பேரணியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.