Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை:திருச்சி கோர்ட் தீர்ப்பு.

0

 

திருச்சியில் நடந்த கொலை வழக்கில் கள்ளக்காதனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நாகர்கோயிலைச் சேர்ந்தவர் ஜெகன் பாபு (வயது 30). அவரது மனைவி அஜிதா (35). சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அவரும் வேலூரைச் சேர்ந்த இயன்முறை மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) ஜான்பிரின்ஸ் (35) என்பவரும் திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் இருவருக்கும் முறையற்ற உறவு தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அஜிதா கள்ளக்காதலன் ஜான் பிரின்சுடன் சேர்ந்து ஜெகன்பாபுவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர். அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி, ஜான் பிரின்சு ஜெகன்பாபுவை திருச்சிக்கு ரயிலில் அழைத்து வந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் ஜான் பிரின்ஸ், ஜெகன்பாபுவை மது அருந்த முடுக்குப்பட்டி ரயில்வே பாலம் அருகே அழைத்துச் சென்றார். அங்கு திட்டமிட்டபடி ஜான் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பான வழக்கு வழக்கு திருச்சி முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஜான் பிரின்சுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பாபு தீர்ப்பளித்தார்.
விசாரணையில் அரசு தரப்பு வழக்குரைஞராக சவரிமுத்து ஆஜரானார்.
இந்த
வழக்கில் 2 ஆவது குற்றவாளியாக சேர்க்கப் பட்டிருந்த அஜிதா இரு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.