தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் காவேரி மண்டல கூட்டம் திருச்சியில் நடைப்பெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, தஞ்சை, கருர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை , மாவட்டங்களிலிருந்து கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஜி.கே.வாசன் எம்.பி. பேசியதாவது:-
தேர்தல் களப்பணிகள் தொடங்குவது, அ.தி.மு.க கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும். கூட்டணியில் தனி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பான பிரச்சினை அதிமுக வில் இல்லை. அந்த பிரச்சினை திமுக கூட்டணியில் தான் சின்னம் பிரச்சனை இருக்கிறது.
மண்டல அளவிலான கூட்டங்கள் நிறைவுபெற்ற பின்னர் நிர்வாகிகளை கலந்தாலோசித்து போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.
ரஜினிகாந்த் நல்ல உடல் நிலையோடு நீண்ட காலம் இருக்க வேண்டும், தேர்தலின்போது நல்லவர்களுக்கு ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறேன்.
மத்திய கூட்டணி என்றால் கூட்டணியில் பாஜக தான் முதன்மை கட்சி, மாநில கூட்டணியில் அ.தி.மு.க தான் முதன்மை கட்சி. எனவே அ.தி.மு.க சார்பில் முக்கிய தலைவர்களுடன் பேசி ஒருங்கிணைப்பாளர் அறிவித்த முதலமைச்சர் வேட்பாளரை ஆதரிக்கிறோம்.
தமாகா – அதிமுக உடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும்.
ஸ்டாலினைப் பற்றி அழகிரி கூறியிருப்பது அவரது கருத்து, அவர் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தில் அதிகமான நிர்வாகிகள் புதிதாக பொறுப்பு போடப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கார்த்திக் சிதம்பரம் விமர்சனம் செய்திருப்பதன் மூலம் அவர் கட்சியை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.
கொரோனா காலகட்டத்தில் தேர்தலை முறையாகவும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நடத்த வேண்டிய கூடுதல் பொறுப்பு தேர்தல் ஆணையத்திருக்கு இருக்கிறது. அதன்படி தேர்தலை ஒரு கட்டமாக நடத்துவதா இரண்டு கட்டமாக நடத்துவதா என்பதை தேர்தல் ஆணையம் மக்கள் நலன் கருதி முடிவெடுக்கும்.
கோவாக்சின் தடுப்பூசியினை போடுவதற்கு மத்திய அரசும் தற்போது ஏற்படுத்தியுள்ளது, அகில இந்திய அளவில் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மக்களை காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் அச்சுறுத்த வேண்டாம்.
விவசாயிகள் போராட்டத்தைப் பொறுத்தவரை முதல் நாள் தொடங்கி இன்று வரை உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை கவனித்தால் போராட்டத்தின் நிலை தெரியும். விவசாயிகள் விழித்துக்கொள்ள வேண்டும்,
எதிர்க்கட்சிகள், தரகர்கள் பிடியிலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றார்.
விவசாயிகளின் நலன் கருதியே இந்த வேளாண் மசோதாக்கள் இயற்றப்பட்டுள்ளது என்றார். பிடிவாத போக்கில் விவசாயிகள் இருந்தால் இரண்டு மாநில விவசாயிகளால் இந்தியாவில் உள்ள அத்தனை விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் .
இவ்வாறு ஜிகே வாசன் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர்கள் நந்தா. செந்தில் வேல், குணா, கே. விஜி, ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் கே.டி. தனபால், அசோக், புங்கனூர் செல்வம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.