திருச்சி தெற்கு மாவட்டதிமுக செயற்குழு கூட்டம் நாளை மாலை கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை.
இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை (07.12.2022 ) மாலை 5.30 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் இனமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா, கழக ஆக்க பணிகள் சம்பந்தமாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் மாநில,மாவட்ட, மாநகர நிர்வாகிகள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி சேர்மன்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் .
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.