பழுதடைந்த சாலைகளை அகற்றி புதிய தார் சாலைகள் அமைத்து தர மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் காயல் அப்பாஸ் வேண்டுகோள்.
காயல் பட்டிணத்தில் பழுதுடைந்த சாலைகளை அகற்றி புதிய தார் சாலைகள் போட வேண்டும் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை .
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.
தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணத்தை சேர்ந்த பகுதி சாலைகளில் மற்றும் தெருக்களிலும் மழை தண்ணீர் தேங்கி நிற்ப்பதனால் காய்ச்சல் போன்ற நோய்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் சிரமம் பட்டு வருகின்றன. மேலும் நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற அரசு மருத்துவ மனையில் குவிந்து வருகின்றன.
ஆகவே பொது மக்கள் நலன் கருதி மழை தண்ணீர் தேங்கி கிடக்கும் இடங்களில் தண்ணீரை அகற்றி இனி வரும் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருக்க நகராட்சி ஆணையர்
தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
மேலும் காயல் பட்டிணம் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்கின்றன. ஆகவே குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை தற்க்காலியமாக பழுது பார்க்காமல் தரமான புதிய தார் சாலைகளை போட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.