வ.உ.சி. பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வருக்கு
சோழிய வேளாளர் நலச் சங்க கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அனைத்து சோழிய வேளாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் மயில் வாகனன் பிள்ளை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் முருகேசன், மற்றும் நிர்வாகிகள் பாஸ்கரன், முருகேசன், லதா வடிவேல்,பாலு பிள்ளை, மனோஜ் குமார், சேகர் பிள்ளை, சூறாவளி பிச்சை, கிருஷ்ணவேணி, ராகவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகி சுப. சோமு, ம.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் வெல்லமண்டி சோமு, பா.ஜ.க. மாநகர், மாவட்ட தலைவர் ராஜசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் சுரேஷ், தேமுதிக மாநகர், மாவட்ட செயலாளர் டிவி கணேஷ், மகளிர் அணி தலைவி லதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள வேளாளர் மரபில் வந்த முதலியார், கவுண்டர், பிள்ளைமார் மற்றும் செட்டியார்கள் ஆகிய அனைவரையும் ஒன்றிணைத்து வேளாளர் என்கின்ற ஒரே பெயரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசை கேட்டு கொள்கிறோம். தமிழகத்தில் உள்ள சோழிய வேளாளர் மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்த்து அவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சலுகைகள் பெற தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதலமைச்சர்
மு க ஸ்டாலினுக்கு பாராட்டுதலை தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
முடிவில் துணைச் செயலாளர் நேருஜி நன்றி கூறினார்.