திருச்சி செம்பட்டு
குளத்தில் விழுந்து
தொழிலாளி பரிதாப சாவு.
திருச்சி, செம்பட்டு
விமான நிலையம் அருகேயுள்ள செம்பட்டு குடித்தெருவைச் சேர்ந்தவர் ஏ.ரங்கநாதன் (வயது 32). கூலித்தொழிலாளியான இவருக்கு சாந்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
ரங்கநாதன் மதுப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். எனவே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
நேற்று பிற்பகலில் அவர் மதுபோதையில் செம்பட்டு பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இறங்கியுள்ளார். அப்போது தடுமாறி குளத்து நீரில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயற்சித்தும் முடியவில்லை. நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் விமான நிலைய போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.