.
பாரதிய ஜனதா கட்சியின் மணிகண்டம் ஒன்றியம் வடக்கு சார்பில் பால் விலை உயர்வு மற்றும் அத்தியாசி பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கள்ளிக்குடி அருகே ஒன்றிய தலைவர்
டி.சி.எம். ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் இல. கண்ணன் ஆகியோர் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் ஒண்டி முத்து, அரசு தொடர்பு மாவட்ட தலைவர் லெனின் பாண்டியன், கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் எம்பயர் கணேஷ் ,தொழில் பிரிவு மாவட்ட செயலாளர் பஞ்சாபி கண்ணன் ,மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், ஒன்றிய துணைத் தலைவர்கள் பழனிச்சாமி, கணேசன், நாகேந்திரன், ஒன்றிய செயலாளர் ரங்காராவ்,
மகளிர் அணி தலைவி நாகஜோதி, விவசாய அணி மாவட்ட செயலாளர் சசிகுமார், அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி தலைவர் சக்திவேல் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் லட்சுமணன், மகாதேவ், ஒன்றிய மாநில மாவட்ட அணி பிரிவு தலைவர்கள், ஊராட்சி கிளை தலைவர்கள் , பொதுமக்கள.
உள்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.