திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் அருணில் நேற்று மாலை நாம் தமிழர் கட்சியின் ஸ்ரீரங்கம் தொகுதி ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் திருச்சி பாராளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுடன் கட்சியின் வளர்ச்சி குறித்தும், புதிய வாக்காளர்களை கட்சியில் சேர்ப்பது,நம் கட்சிக்கு தேர்தல் நேரத்தில் வாக்குகள் சேகரிப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகள் பற்றி கலந்த ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட தலைவர் சுப. கண்ணன் முன்னிலை வைத்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் ராஜா அழகப்பன்,
ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் தீரன் கோபி,தலைவர் நடராஜன்,மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜெய்சன் உள்பட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.