மக்களுக்காக போராடினால் தான் வாக்குகளை பெற முடியும்.தமிழர் தேசம் கட்சியின் தலைவர் கே கே செல்வகுமார் பேச்சு.
இன்னல்களைத் தாண்டி வெற்றி பெற வேண்டும்
கட்சியினருக்கு கட்டுப்பாடும், நேரம் கடைப்பிடித்தலும் அவசியமானது.
நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில்
த.தே.க தலைவர் கே.கே செல்வகுமார் பேச்சு.
தமிழர்
தேசம் கட்சியின் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சியில் நடந்தது.
கூட்டத்துக்கு கட்சி நிறுவன தலைவர் கே.கே. செல்வகுமார் தலைமை தாங்கி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
மக்களுக்காக போராடினால் தான் அவர்களின் வாக்குகளை பெற முடியும். ஆகவே அறவழி போராட்டங்களுக்கு உடனடியாக நிர்வாகிகள் விரைந்து வர வேண்டும்.
நமது இயக்கத்துக்கு கட்டுப்பாடும், நேரம் கடைப்பிடித்தலும் அவசியமானது. கட்சி தொடங்கியதுமே பல இன்னல்களை தந்தார்கள். இனிமேலும் தருவார்கள். இதையெல்லாம் எதிர்கொண்டு நாம் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும். நமக்கான எதிர்காலம் சிறப்பாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ், மாநில பொருளாளர் கணேசன் அம்பலம், தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், மாநில இளைஞரணி செயலாளர் தீனா தேவேந்திரன், மாநில செயலாளர் செங்காடு மணி, மாநில துணைச் செயலாளர்கள் குணா அம்பலக்காரர், லதா மாதவன் மற்றும் மாநில மாவட்ட, நகர,ஒன்றிய, ஊராட்சி நிலை பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.