30 ஏக்கர் புறம்போக்கு இடம் வீட்டு மனைகளாக மாறி வருகிறது.புங்கனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி முதல்வருக்கு மனு.
திருச்சி புங்கனூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இன்ஜினியர் கார்த்தி (அதிமுக) தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:
எங்களது ஊரான தாயனுர் கிராமம் புங்கனூர் ஊராட்சியில்
சர்வே எண் 15,16,17,18க்கு உட்பட்ட 30 ஏக்கருக்கு மேல் உள்ள இடத்தில், எந்த
ஒரு சர்வேயர் மூலமாகவும் இடத்தை அளவீடு செய்யாமல் வீடுமனை
பிரிவுகளாக மற்ற ஏற்பாடு நடந்து கொண்டிருகிறது.
இந்த இடத்தை
சுற்றியும் 10அடிக்கு மேல் உயரம் கொண்ட சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
இதில் சர்வே எண் 17ல் நந்தவனம் என்கின்ற 1.75 ஏக்கருக்கு மேல் உள்ள
புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தும், பொதுபணித்துறைக்கு சொந்தமான
இடங்களையும், மலை புறம்போக்கு, குளத்து புறம்போக்கு மற்றும் பல சர்வே
எண் கட்டுப்பட்டுள்ள இடங்களையும் சேர்த்து ஆக்கிரமித்து சுற்று சுவர்
எழுப்பியுள்ளனர்.
இது அனைத்தையும் யாரிடம் அனுமதி பெற்று, எந்த
அடிப்படையில் எங்கள் ஊருக்கு சொந்தமான பொது இடங்களை
ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்று தெரியவில்லை.
எனவே 15,16,17,18 ஆகிய சர்வே எண்ணுக்கு உட்பட்ட அனைத்து இடத்தையும், அரசு சர்வேயர் முலமாக அளவீடு செய்து எங்கள் ஊருக்கு சொந்தமான அணைத்து பொது இடங்கள் மற்றும் புறம்போக்கு இடத்தை எங்கள் ஊர் பயன்பாட்டிற்கு மீட்டு தரவேண்டும். இந்த அனைத்து ஆக்கிரமிப்பு இடங்களையும் எங்கள் ஊரிடம் ஒப்படைக்கும் வரை, இந்த இடத்தை வீடு மனை பிரிவுகளாக மாற்ற அனுமதி வழங்கபடக்கூடாது என்று ஊர் பொது மக்கள் சார்பாகவும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் என்ற முறையிலும் கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறி உள்ளார்.