திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் படி துறையூர் பகுதியில் வாகன சோதனை செய்தபோது கர்நாடகா பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ கார் நிற்காமல் வந்ததை துரத்தி சென்று மண்ணச்சநல்லூர் பகுதியில் பிடிக்கப்பட்டது.
அதிலிருந்து நபர் ஓடிவிட்டார் அவரை தேடி வருகின்றனர்.
காரில் இருந்த 57 சாக்கு முட்டைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்ததை முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் யாஸ்மின், முசிறி ஆய்வாளர் செந்தில்குமார், தொட்டியம் ஆய்வாளர் முத்தையன், மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் ரமேஷ் குமார் உள்ளிட்ட இரவு பணி காவலர்களால் மேற்படி வாகனம் மற்றும் புகையிலை குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கைப்பற்றிய காவல் அதிகாரிகளை காவல்துறை திருச்சி சரக துணை தலைவர் மற்றும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆகியோர் பாராட்டினார்கள்.