விவசாயிகளின் நலனுக்காக போராடுவது அம்மா அரசு மட்டும்தான்: ஓபிஎஸ் டுவிட்.
விவசாயிகளின் நலனுக்காக போராடுவது அம்மா அரசு மட்டும்தான்: ஓபிஎஸ் டுவிட்.
திமுக மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்த நிலையில், அம்மா ஆட்சி தான் அதற்கு தடை விதித்து விவசாயிகளை காத்துள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து, ஓபிஎஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “விவசாயிகள் மீது அக்கறை உள்ளதுபோல் இப்போது கபடநாடகம் ஆடும் திமுக தான் 04.01.2011 அன்று மீத்தேன் திட்டத்திற்கு அனுமதியளித்து தமிழக விவசாயிகளுக்கு கடுமையான துரோகம் இழைத்தது. ஆனால் அத்திட்டத்திற்கு 17.7.2013 அன்று தடைவிதித்து விவசாயிகளின் நலன் காத்தவர் அம்மா அவர்கள் தான்.
விவசாயிகளின் நலன் காக்க காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, 20.02.2020 அன்று பேரவையில் சட்டம் இயற்றியது அம்மாவின் அரசு தான்.இதனை தமிழக மக்கள் நன்கு அறிவர்.
விவசாயிகளின் பாதுகாவலன் அம்மா அரசு மட்டுமே. எனவே திமுகவின் பொய்யுரைகளை ஒருபோதும் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

