திருச்சி
தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் 19-வது பட்டமளிப்பு விழா.
2155 பேர் பட்டம் பெற்றனர்.
திருச்சி, தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் 19 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற , பாஷ் பன்னாட்டுக் குழும முன்னாள் நிர்வாக இயக்குனரும், மண்டல தலைவருமான சௌமித்ர பட்டாச்சார்யா, பட்டங்களை வழங்கி பேசினார்.
நிகழ்வில் என்ஐடி இயக்குனர் ஜி.அகிலா பேசுகையில்:
தேசிய தொழில்நுட்பக் கழகம் கல்வியிலும் ஆராய்ச்சியிலும் புரிந்த சாதனைகளைப் பட்டியலிட்டு, அவை இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் இடையறா உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் பலனே யாகும் என்றார்.
என் ஐடி நிர்வாகக்குழு தலைவர் பாஸ்கர் பட் பேசுகையில்,
திருச்சி என்.ஐ.டி உலகத் தரத்திற்கு ஈடான உள்கட்டமைப்பைத் தன்னகத்தே கொண்டு, சமூகத்திற்கு மகத்தான சேவை புரிகிறது என்றர்.
நிகழ்வில்,துறை ரீதியாக சிறப்பிடம் பெற்ற இளங்கலையில் 10, முதுகலையில் 30 மாணவ, மாணவியருக்கு பதக்கங்களும், குடியரசு தலைவர் சிறப்புப் பதக்கம், மின் பொறியியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவி ஜெ. சௌந்தர்யாவுக்கும் வழங்கப்பட்டது.