கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது.

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் அங்கு சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(வயது 21,) ஸ்ரீரங்கம் பஞ்சகரை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 22 ) ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர் . அவரிடம் இருந்து 280 கிராம் கஞ்சா 20 போதை மாத்திரைகள் மருத்துவ ஊசி மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில் ஐந்தாயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல பாலக்கரை பெல்ஸ் மைதானம் அருகே போதை மாத்திரை விற்ற முதலியார் சத்திரத்தைச் சேர்ந்த ஆல்பின் (வயது 22 )என்ற வாலிபரை பாலக்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 19 போதை மாத்திரைகள், 1 மருத்து ஊசி, தண்ணீர் பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.

