திருச்சி நீதிமன்றத்தில் மெகா துப்புரவு பணி நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்றார்கள்.

ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டார்.
திருச்சி நீதிமன்றம் வளாகத்தின் மெகா துப்புரவு பணி இன்று நடைபெற்றது.இந்நிகழ்விற்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி கணேசன் தலைமை தாங்கினார்.

மெகா துப்புரவு பணியினை ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி அக்பர் அலி தொடங்கி வைத்தார்.திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார்.மாவட்ட நீதிபதிகள் சுவாமிநாதன், மகேஸ்வரி, கார்த்திகா, கண்ணன், சண்முகப்பிரியா, மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி நசீர் அலி,மாஜிஸ்திரேட்கள் முகமது சுகால்,பரம்வீர்,சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைமை வழக்கறிஞர் சரபோஜி மற்றும் 450 நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு மெகா துப்புரவு பணியில் ஈடுபட்டனர்.பின்னர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

