கஞ்சா விற்ற 77 வயது பாட்டி

உள்பட 2 பேர் கைது.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், திருவெறும்பூர் மற்றும் ராமஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மலைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற ராம்ஜிநகர் கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த முகேஷ் (வயது 52) என்பவரை கைது செய்த எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார், அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், ராமஜிநகர் நியூ காட்டூர் அருகே கஞ்சா விற்ற ராம்ஜிநகர் மில் காலனியை சேர்ந்த சின்னப்பொண்ணு (வயது 77) என்ற பாட்டியை போலீசார் கைது செய்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

