சமரச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்

சமரச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமரச தினம் கொண்டாடப்பட்டது. சமரச தினத்தினை முன்னிட்டு இன்று திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் சமரச தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி விழிப்புணர்வு பேரணியை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும்/மாவட்ட முதன்மை நீதிபதியுமாகிய எம்.கிறிஸ்டோபர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கணேசன்,துணைத் தலைவர் வடிவேல்சாமி,குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் முல்லை சுரேஷ்,மற்றும் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், மத்தியஸ்தர்களும், நீதிமன்ற பணியாளர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அதன் பிறகு திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகம் சென்று, மீண்டும் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் வரை சமரச தின விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

