திருச்சியில்

டெய்லர் கடை உரிமையாளரிடம் 20 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் .
திருச்சி கிழேதார் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது (வயது 43 ) இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார் இவரும் பிரபல பட்டு வணிக நிறுவனத்தின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் சந்து முகமது உடன் தொழில் முறையில் நண்பர்களாக இருந்து உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் சந்து முகமதுவை அணுகி அவர்களுக்கு நந்தி கோவில் தெருவில் சொந்தமாக கடையுள்ளதாகவும் அதை வாடகைக்கு விட முடிவு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்கள்.
அதற்கு சந்து முகமது ரூ.26 லட்சத்து 75 ஆயிரம் பணத்தை அவர்களிடம் கொடுத்து கடையை வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 26 லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்தார். அதன் பிறகு தான் அவருக்கு அந்த கடை அவர்களுடையது இல்லை என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தான் கொடுத்த பணத்தை அவர்களிடம் திரும்பி கேட்டபோது வெறும் ஆறரை லட்சத்தை மட்டும் கொடுத்து மீதமுள்ள ரூ. 20 லட்சம் பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளனர்.
இதுகுறித்து சந்து முகமது அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

