திருச்சி நீதிமன்றம் தீயணைப்பு நிலையம் எதிரில்

அடையாளம் தெரியாத முதியவர் பிணம் .
திருச்சி ஹீபர் ரோட்டில் நீதிமன்றம் அருகே மாவட்ட தீயணைப்பு நிலையம் உள்ளது.இதன் எதிரில் உள்ள டிபன் கடை முன்பு அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது. இதுகுறித்து கோ- அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி கௌதம் பாபு அளித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து இவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

