Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நாளை லால்குடி ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடு உரூஸ் .

0

'- Advertisement -

லால்குடி ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடு உரூஸ் .

 

Ad banner

திருச்சி மாவட்டம் லால்குடி கஸ்பா சிறுதையூரில் அடங்கி நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து இன்றைய நாளது வரையில் பற்பல அற்புதங்களும் மகிமைகளும் நடைபெற காரணமாய் விளங்குகின்ற ஹஜ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா அவர்களின் சந்தனக்கூடு உரூஸ் விழா நாளை (04- 4 2026) சனிக்கிழமை அன்று ஷவ்வல் மாதம் பிறை 15 இரவு அன்று நடைபெறுகிறது.

 

இந்த விழாவில் அனைத்து சமுதாயத்தினரும் இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு வருகை தந்து பாத்திஹா மற்றும் நற்காரியங்களில் கலந்து கொள்ளவும்.சனிக்கிழமை இரவு லால்குடி மேல வீதி ஆசூர்கானாவில் இருந்து சுமார் இரவு 11.00 மணி அளவில் மின் மற்றும் மலர் அலங்காரத்துடன் சந்தனக்கூடு ஊர்வலமாக புறப்பட்டு சிறுதையூரில் உள்ள தர்காவில் அமைந்திருக்கும் ரௌலா ஷரீஃபுக்கு சென்று சந்தனம் பூசப்படும். அன்று இரவு மவுளூது ஓதப்படும்

இந்த விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு வருடா வருடம் வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களிலிருந்து இஸ்லாமியர்கள் உள்பட அனைத்து சமுதாயத்தினரும் வருகை புரிகின்றனர். அதே போல் இந்த வருடமும் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் நிர்வாகத்தினர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

விழாவிற்கான ஏற்பாடுகளை லால்குடி ஜாமி ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறனர்.

 

 

அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன் தலைவர் இமாம்பேக், செயலாளார் ரஹமத்துல்லா,பொருளாளர் நசீர் உசேன்,கௌரவ தலைவர் முகமது இலியாஸ் பாஷா, துணைத் தலைவர்கள்,அஜ்ஜி சர்பத் சலீம் ,முஸ்தபா,

துணைச் செயலாளர்கள்

அப்துல் ரவூப்,

ஜின்னா ஜாகிர் உசேன்,ஷேக் மொய்தீன்,முகமது உசேன்,நிர்வாக குழு உறுப்பினர்கள் நசீர் பாஷா,அப்துல் சலீம்,சதாகத் அலி,அப்பாஸ்அலி ரசூல் பேக்.அப்துல் சலாம்.ரஹ்மத்துல்லாஹ்.அன்சர்அலிலியாகத் அலி மற்றும் முக்கியஸ்தர்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.