Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் போலீஸ் என கூறி ஏமாற்றிய வாலிபர்,கஞ்சா விற்ற பாட்டி உள்ளிட்ட இன்றைய கிரைம் செய்திகள்

0

'- Advertisement -

l.

Ad banner

திருச்சியில் போலீஸ் எனக்கூறி செல்போன் கடை ஊழியரிடம் பணம் அபேஸ்.

ராமேஸ்வரம் வாலிபர் அதிரடியாக கைது.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு காலனி சேர்ந்தவர் முகமது காயிப் (வயது 20). இவர் சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வருகிறார். இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அன்னை நகரை சேர்ந்த சாம் என்ற ஜெத்ரோ (வயது 25) என்பவர் தான் போலீஸ் என்றும் நான் திருச்சியில் வேலை செய்கிறேன் என்று கூறி நட்பாக பழகி உள்ளார். பின்னர் அவர் தனது செல்போனில் ஜி பே சரியாக வேலை செய்வதில்லை என்று கூறி அவரிடமிருந்து ரூ 1000 பெற்றுள்ளார். சம்பவத்தன்று சாம் ஜெத்ரோ முகமது காயை தொடர்பு கொண்டு ஏலத்தில் இருசக்கரம் வாங்கி தருவதாகவும், அதற்கு முன்பணம் ரூ. 1000 அனுப்பு மாறும் கூறியுள்ளார்.இதனை நம்பிய முகமது காயிப் அவருக்கு செல்போன் மூலம் ரூ.1000 அனுப்பி உள்ளார். இதையடுத்து சாம்ஜெத்ரோ வாங்கிய பணத்தையும், இரு சக்கர வாகனத்தையும் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முகமது காயிப் இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம் ஜெரோவை கைது செய்தனர்.

2.

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்ற பாட்டி அதிரடியாக கைது.

திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி (வயது 65) என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

3.

மனைவியை பிரிந்து வசித்து வந்த தொழிலாளி வீட்டில் பிணமாக கிடந்தார்.

திருச்சி கருமண்டபத்தில் சம்பவம்.

திருச்சி கருமண்டபம் சக்தி நகரை சேர்ந்தவர் டோமினிக் பிரபாகர் (வயது 49) . இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஆறு மாதமாக தனியாக வசித்து வந்தார். இதனால் மன விரக்தியில் இருந்து வந்த டோமினி பிரபாகர் சம்பவத்தன்று தனது வீட்டில் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.