தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் .இன்று திருச்சி நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் .இன்று திருச்சி நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
வரிசையில் நின்று வாக்களித்த வழக்கறிஞர்கள் .
தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இந்த தேர்தல் இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள வக்கீல்கள் சங்கங்கள், கோர்ட்டுகளில் வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.என்.பாட்ஷா நியமிக்கப்பட்டு உள்ளார். வக்கீல்கள் சி.டி.மோகன், தங்கவேல், ஹெரால்டுசிங், கணபதிசுப்பிரமணியன், சாமிதுரை, சுந்தரவடிவேல், ராஜசேகரன் ஆகியோர் மாநில தேர்தல் குழுவில் இடம் பெற்று உள்ளனர்.
திருச்சி மாவட்ட கோர்ட்டை பொறுத்த அளவில் 2783 வழக்கறிஞர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி பாஸ்கரன் செயல்படுகிறார். தேர்தல் பார்வையாளர்களாக ரவிச்சந்திரன், எஸ்.பி.கணேசன், மார்ட்டீன் ஆகியோரும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக பாலசுப்பிரமணியம், ஸ்ரீவத்சாசுப்பிரமணியம், சுதா ஆகியோரும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
திருச்சி மாவட்ட கோர்ட்டில் திருச்சி வழக்கறிஞர் சங்கத்தில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், கூடுதல் மாவட்ட நீதிபதி சுவாமிநாதன், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நசீர்அலி ஆகியோர் முன்னிலையில் வழக்கறிஞர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்த நிகழ்வில் திருச்சி வக்கீல் சங்க தலைவர் எஸ்.பி கணேசன், திருச்சி வக்கீல் சங்க செயலாளர் சி.முத்துமாரி, இணைச்செயலாளர் விக்னேஷ், திருச்சி நகர வக்கீல் சங்க பொருளாளர் வக்கீல் சுதர்சன், திருச்சி வக்கீல் சங்க முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியன், குற்றவியல் வக்கீல் சங்க தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், வக்கீல்கள் சரவணன், ராஜேந்திரகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

