Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டு இயக்க மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வு ஆலோசனைக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

0

'- Advertisement -

பிஜேபி அணிக்கு வாக்களிக்க மாட்டோம்-தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டு இயக்கம் அறிவிப்பு.

தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டு இயக்க மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வு ஆலோசனைக்கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

 

இந்தக்கூட்டத்தில் விவசாய சங்கங்களில் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெறும் விதமான கோரிக்கைகள் அனைத்துக்கட்சியினருக்கும் தெரியப்படுத்துவது என ஆலோசனை செய்யப்பட்டது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு விவசாயிகளின் கூட்டியக்க தலைவர் காவிரி தனபால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் தெரிவித்தது வருமாறு;-

 

திருச்சியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் , தமிழ்நாடு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கின்ற இயக்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கலந்தாய்வுக் கூட்டத்தில் சுமார் 84 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பில் 58 சங்கங்களின் பிரதிநிதிகள், முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டு இந்த அமைப்பு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவளிப்பது என்றும், தவிர்க்க முடியாமல் கலந்துக்கொள்ள முடியாத பல்வேறு அமைப்புகள் இந்த பொதுக்குழு, கலந்தாய்வில் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

இன்று நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களில் ஒத்த கருத்தியல் அடிப்படையில் விவசாயிகளுக்கு எதிராக விதை சட்டம், மரபணு மாற்று பயிரை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்ற வகையிலும், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 100% வரியும், வெளிநாட்டிலிருந்து இருக்குமதி செய்யும் வேளாண் பொருட்களுக்கு ஜீரோ நிலையில் ஒத்துக்கொண்டிருக்கின்ற மத்திய அரசையும் கண்டிக்கிறோம். அதேநேரம் இலவச மின்சாரத்தை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 21 லட்சம் இலவச மின்சாரத்துக்கு எதிராக சட்டத்தை கொண்டு வருவதும், மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும், அந்த விலை கட்டுப்படி ஆகாத நிலையில் மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து வழங்க வேண்டும் என்பது நடைமுறை. அந்த வகையில் மாநில அரசு கொடுக்கக் கூடாது என ஒன்றிய அரசு புதிய சட்டம் கொண்டு வருகிறது.

ஏற்கனவே விவசாயிகள் நாலிவடைந்துள்ளனர், இறையாண்மை காக்கப்படாது. உலக சந்தையை திறந்து இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய வேளாண் பொருட்களை அனைத்தையும் வீழ்ச்சியடைய வைக்கும் முகமாக ஜீரோ வட்டி என்ற வகையில் வெளிநாட்டில் உற்பத்தியாகும் வேளாண் பொருட்கள் இந்தியாவுக்குள் வருவதற்கு மத்திய பஜாக அரசு அனுமதி கொடுத்திருப்பதை கண்டிக்கிறோம். கர்நாடகாவில் இருக்கும் மேகதாட்டு அணையை தடுக்கும் விதமா எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்க வில்லை. இப்படி தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக பல்வேறு சட்டத்திட்டங்களை இயற்றியும், அதற்கு உடந்தையாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியையும் கண்டிக்கின்றோம். உழவர்கள் நலன் கருதி உழவர்களுக்கு எதிராக செயல்படும் பிஜேபி அரசுக்கு வாக்களிப்பதில்லை என தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டு இயக்கம் ஏகமனதாக முடிவெடுத்திருக்கின்றது.

அதேநேரம், பெரும்பான்மையான விவசாயிகளுக்கு யார் நன்மை செய்வார்கள், வேளாண்மை கூட்டுறவு கடன்களில் வட்டி தருவது யார் உட்பட 68 தேர்தல் வாக்குறிதி கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து வழங்க உள்ளோம். எந்த கட்சி எங்களது கோரிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவை வழங்குமோ அந்தக் கட்சியை நாங்கள் முழுமையாக ஆதரிப்போம், வாக்களிப்போம். அதேநேரம் பிஜேபி சார்ந்த அணிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என தெரிவித்தனர்.

இந்தக்கூட்டத்தில் வாரணாசி ராஜேந்திரன், இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் தாராபுரம் சிவக்குமார், தஞ்சாவூர் ஜீவகுமார், கடலூர் குஞ்சிதபாதம் பிள்ளை, செல்வக்குமார், பாலசுப்ரமணியன், புதுக்கோட்டை தனபதி, ஈரோடு பொன்னையன், மகாதானம் ராஜாராமன், கோயம்புத்தூர் மாணிக்கசாமி, தஞ்சை கோவிந்தராஜ், பொன்னுசாமி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.