Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: வீடு இடிக்கும் பணியின் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி.

0

'- Advertisement -

திருச்சி அருகே வீடு இடிக்கும் பணியின் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம். இவரது மகன் கிறிஸ்டோபர் (வயது 21).

இவர் தனது தந்தையுடன் சேர்ந்து, வீட்டில் உள்ள பழைய சுவரை மின்சார கட்டிங் மிஷின் மூலம் இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு கிடந்த மின்சார ஒயரை கிறிஸ்டோபர் மிதித்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவரை அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு உடனடியாக சிரிச்சிக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கிறிஸ்டோபர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவரது தந்தை சூசைமாணிக்கம் திருவெறும்பூர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் திருவெறும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.