Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது.

0

'- Advertisement -

திருச்சியில்  தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களுடன் 2 பேர் கைது.

துறையூர் அருகே உள்ள பெருமாள்பாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்த பெருமாள்பாளையம், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த நடராஜன் (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், வளநாடு காவல் எல்லைக்குட்பட்ட வேம்பனூர் பஜார் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக புகையிலை விற்ற வேம்பனூர் பகுதியைச் சேர்ந்த வீராசாமி (வயது 52) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

அவரிடமிருந்து 7 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த வளநாடு போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.