Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தின விழா.

0

'- Advertisement -

திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தினம் நேற்று வியாழக்கிழமை 12.03.2026 நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மாதாரசி ஸ்டெல்லா மேரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.

சமூகத்தில் பெண் குழந்தைகள் பெற்றோரின் வழிகாட்டுதல் படி நடக்க வேண்டும் என்பது பற்றியும் பேசினார். வழக்கறிஞர் டி.ஜெயந்திராணி சிறப்பு ரையாற்றினார். திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் எஸ்.கோமதி முன்னிலை வகுத்தார். புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி சமூக பணித்துறை தலைவர். முனைவர். அனிதா பாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.

 

சி.சசி வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக பணியாளர்கள், பெண் ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப் பட்டனர். மேலும் நிகழ்ச்சியில் பட்டார்வோர்த் ரோடு ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, பொன்மலை புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வடுகர்பேட்டை புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் புனித சிலுவை தன்னாட்சி கல்லூரி புணர்வாழ்வியல் துறை மாணவிகளின் விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

ஆர்த்தி மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

இறுதியாக ஜோசப் நன்றி கூறினார்.நிகழ்ச்சியின் அனைத்து ஏற்படுகளையும் சாக்சீடு இயக்குனர் அருட். சகோதரி. பரிமளா சேவியர் செய்து இருந்தார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.