திருச்சி உறையூரில் தீபாவளி சீட்டு நடத்தி பல கோடி மோசடி.ஆதாரங்களுடன் புகார் அளிக்க பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லி கிரேஸ் அறிவிப்பு.
திருச்சி உறையூர் கீழகல்நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் தங்கம், இவர் பல வருடங்களாக தீபாவளி பண்டு சீட்டு, ஏலசீட்டு, மாதாந்திர சிறப்பு சிறு சேமிப்பு திட்டம் மற்றும் தீபாவளி தங்கநகை சிறப்பு சிறுசேமிப்பு திட்டம் என பல வகையான சீட்டு நடத்தி வந்துள்ளார்.
இதில் ரூ.2.50 லட்சம் ஏலசீட்டில் 10 நபர்கள் சேர்ந்து மாதம் ரூ.25 ஆயிரம் வீதம் 10 மாதங்கள் செலுத்தினால் முதிர்வு காலம் முடிந்தவுடன் சுமார் 2.5 கோடி பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி நிதிநிறுவனத்தை மூடி தலைமறைவாகினார்.
இதுகுறித்து உறையூர் எழில்நகர் பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் அளித்த புகாரின்பேரில், திருச்சி மாநகர குற்றப்பிரிவில் வழக்கு பதிந்து, தற்போது பொருளாதார குற்றப்பிரிவிற்கு இவ்வழக்கானது மாறுதலில் பெறப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.
இதுவரை 22 முதலீட்டாளர்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு அதன் இழப்பீட்டு தொகை ரூ. 64,74,599/- இவர்களை இவ்வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு முதல் குற்றப்பத்திரிக்கை தயார் செய்யப்பட்டு மதுரை சிறப்பு நீதிமன்ற (TNPID Court)-ல் 23.01.2025ந் தேதி முதல் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. மேலும் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இதுவரை புகார் அளிக்காதவர்கள் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர், அப்துல்சலாம் தெரு. மன்னார்புரம், திருச்சி என்ற முகவரியில் தக்க அசல் ஆவணங்களுடன் புகார் அளிக்கலாம் என
பொருளாதார குற்றபிரிவு டிஎஸ்பி லில்லி கிரேஸ் தெரிவித்துள்ளார்.

