போலி பாஸ்போர்ட் திருச்சி விமான நிலையத்தில் இரண்டு வாலிபர்கள் கைது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலடி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் ராஜதுரை (வயது 26 ) , உமையர் தங்கம் (வயது 31). இவர்கள், மலேசியாவில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி திரும்பினர்.

திருச்சி விமான நிலையத்தில் இமிகிரேசன் அதிகாரிகள், அவருடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது போலி முத்திரைகள் மூலம் பாஸ்போர்ட் பெற்று மலேஷியா சென்று வந்தது கண்டுபிடிக்க பட்டது. இதை தொடர்ந்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். வழக்கு பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர்.

