பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது.
பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.

திருச்சிக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க அனுமதி கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் காவல்துறையினரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்கள்.
ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.மேலும் இன்று போலீசார் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள மாநிலத் தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு வீட்டில் அவரை வெளியே செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இது பற்றி தகவல் அறிந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் விவசாயிகள் ஏராளமானவர்கள் அங்கு குவிந்தனர்.
பிறகு பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி மறுத்ததை கண்டித்து
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அந்தப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் அய்யாக்கண்ணு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை கைது செய்து வேனில் அழைத்து சென்று அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக கரூர் பைபாஸ் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

