திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரை காணவில்லை.

திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் டேனியல் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
தான் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறியுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் இது குறித்து பாலக்கரை காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியலை தேடி வருகின்றனர்.

