Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஸ்ரீரங்கத்தில் காதல் மனைவியை வெட்டிய கணவன் கைது .

0

'- Advertisement -

ஸ்ரீரங்கத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை வெட்டிய கணவன் கைது .

ஶ்ரீரங்கம் கீழ அடையா வளஞ்சான் வீதி பகுதியை சேர்ந்தவர் முரளி இவரது மனைவி சினேகா (வயது 25) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.

சுமைதூக்கும் தொழிலாளியான முரளி அவரது மனைவி மீது அடிக்கடி சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்து உள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மனைவி சினேகாவிடம் எப்போதும் போல் தகராறில் ஈடுபட்ட முரளி திடீரென அவரது மனைவியை அரிவாளால் தாக்கி உள்ளார்.இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சினேகா திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காதல் மனைவியை அரிவாளால் வெட்டிய

கணவன் முரளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.