கடனை திரும்ப செலுத்த முடியாததால் விரக்தி :
திருச்சியில் காதல் திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் தற்கொலை .
திருச்சி தென்னூர் இனாம்தார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 33) ஆட்டோ டிரைவர் .அதே பகுதியைச் சேர்ந்த நஜிமா பேகம் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இனாம்தார்தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நஜிமா பேகம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் .இந்த நிலையில் ராஜா அதிகப்படியாக வீட்டு செலவிற்கு கடன் பெற்றதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நேற்று கடன் கொடுத்தவர்கள் ராஜாவின் வீட்டிற்கு வந்து கடமை திரும்ப கட்டுமாறு கேட்டு உள்ளனர். இதனால் ராஜா மன உளைச்சலில் இருந்து வந்தார் .
இதைத்தொடர்ந்து நஜிமா பேகம் மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது ராஜா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 
இது குறித்து தில்லை நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து,ஆட்டோ டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..

