கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50 க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

காலை நேரத்தில் தெருக்களிலும் வயல்வெளியிலும் காகங்கள் சிதறி கிடந்தன. இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இறந்து கிடக்கும் காகங்களை நாய்கள் உள்ளிட்ட பிற உயிரினங்கள் கொத்தி தின்னும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக அச்சம் நிலவுகிறது. சுற்றுப்புறத்தில் துர்நாற்றமும் வீசுவதாக கூறப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காகங்கள் ஏன் இறந்தன,பறவை காய்ச்சலால் இருந்ததா? என்பது குறித்து உடனடி ஆய்வு நடத்த வேண்டும் என்று பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விஷப்பொருள் காரணமா அல்லது நோய்தொற்றா என சந்தேகம் எழுந்துள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

