Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு .

0

'- Advertisement -

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவு

 

திருச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆரோக்கியசாமி அவர்களின் நினைவாக எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி அவர்களால் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் நிறுவப்பட்டுள்ள ஆசா அறக்கட்டளை சார்பாக வீரமாமுனிவர் குறித்த சொற்பொழிவும், கலைப் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.

 

கல்லூரி வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த வீரமாமுனிவர் திருவுருவப்படத்திற்கு கல்லூரிச்செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே‌ச., கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. தேர்வு நெறியாளர் முனைவர் கு.அலெக்ஸ், மற்றும் பேராசிரியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே‌ச. தலைமையில் நடைபெற்ற விழாவில் நிகழ்வில் எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி, தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாக்கிய செல்வரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நரம்பியல் மருத்துவர் அலீம் வாழ்த்துரையாற்றினார். தமிழாய்வுத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் வளனறிவு (எ) இ.சூசை தேம்பாவணி ஓர் இறையியல் இலக்கியம் என்னும் பொருண்மையில் சிறப்புரையாற்றினார்.

அவர் தன் சிறப்புரையில் வீரமாமுனிவரின் இலக்கியப்பணிகள் மட்டுமல்லாது அவருடைய சமூகப் பணிகளையும் குறிப்பாக கிறிஸ்தவ சமயத்தின் மதிப்பீடுகளை வாயிலாக தமிழ்க் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு தம் படைப்புகளின் வழியாக எவ்வாறு எடுத்துரைத்தார் என்பதைப் பல்வேறு சான்றுகளோடு விளக்கினார்.

தொடர்ந்து கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு ரொக்க பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. முன்னதாக பேராசிரியர் பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ் வரவேற்புரை ஆற்றினார்‌ முனைவர் ஜா.சலேத் அறக்கட்டளை அறிமுக உரையாற்றினார். நிறைவில் முனைவர் கா‌.ஜான் கென்னடி நன்றியுரை ஆற்றினார் நிகழ்ச்சிகளை மாணவர் பேரவைத் தலைவர் ஆசிக் டோனி தொகுத்து வழங்கினார் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்று பயன்பெற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.