Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் மூதாட்டி மற்றும் வாலிபர் பரிதாப பலி.

0

'- Advertisement -

திருச்சியில் இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி சாவு.

 

சாலையை கடக்கும் போது நடந்த சம்பவம் .

 

திருச்சி அரியமங்கலம் மலையப்பா நகர் அண்ணாதெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன். இவரது மனைவி செல்வமணி (வயது 65) இவர் நேற்று திருச்சி தஞ்சை ரோடு அரியமங்கலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் திடீரென்று சாலையை கடக்கும் பொழுது அந்த வழியாக எதிரே வந்த இருசக்கர வாகனம் செல்வமணி மீது மோதியது இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செல்வமணி ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதேபோன்று திருச்சியில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு .

 

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகை அருகில் சுமார் 32 வயது மதிப்பு தக்க வாலிபர் ஒருவர் கடந்த 5ந்தேதி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது அந்த வாலிபர் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார்.இதை அடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வாலிபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர் பெயர் சிவா (வயது 32) என்பது மட்டும் தெரிய வந்தது எந்த ஊரை சேர்ந்தவர். எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.