Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உலக கோப்பையை காலில் மிதித்து போஸ் கொடுத்த ஆஸ்திரேலியா அணிக்கு இது தேவைதான்.

0

'- Advertisement -

இந்தியாவிலும் இலங்கையிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில், ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியா குரூப் சுற்றிலேயே வெளியேறி ஆஸ்திரேலியா ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

 

‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வேவிடம் அடைந்த தோல்வியால் சூப்பர் 8 வாய்ப்பை ஏற்கனவே சிக்கலாக்கிக் கொண்டது.

 

நேற்று நடைபெறவிருந்த ஜிம்பாப்வே – அயர்லாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டதால், ஜிம்பாப்வேவிற்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 புள்ளிகளுடன் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது.

 

இதன் விளைவாக ஆஸ்திரேலியா இத்தொடரில் லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில், 2009-ஆம் ஆண்டிற்குப் பிறகு இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியா குரூப் சுற்றோடு வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

2023 உலகக்கோப்பையை காலில் மிதித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு தொடரும் சறுக்கல்கள் :

2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற பிறகு, ஆஸ்திரேலிய அணி ஐசிசி நடத்திய அடுத்தடுத்த 4 தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வருகிறது:

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றோடு வெளியேற்றம்.

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதியில் தோல்வி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து மகுடத்தை இழந்தது.

தற்போதைய தொடர்: இப்போது முதல் சுற்றிலேயே வெளியேறிப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பெரும் மதிப்புக்கு உரிய உலகக்கோப்பையை 2023 ல் ஒருநாள் உலக கோப்யை ஷூ காலுடன் மிதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் உலகக் கோப்பை வெல்வதெல்லாம் எங்கள்காலணிகளுக்கு சமம் என்பது போல் திமிராக போஸ் கொடுத்தனர்.

தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு இந்த தண்டனை தேவைதான் என கூறி வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.