திருச்சி சுப்ரமணியபுரத்தில் மூதாட்டி மாயம்.
திருச்சி சுப்பிரமணியபுரம் ரெங்கா நகரைச் சேர்ந்தவர் இளங்குமரன் (வயது46 )இவரது தந்தை சண்முகம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவரது தாயார் வசந்தி (வயது 75 ) அதே பகுதியில் இளங்குமரன் வீட்டின் அருகே வசித்து வருகிறார். இந்த நிலையில் தாய் வசந்தி மற்றும் மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வசந்தி கோபித்துக் கொண்டு அவ்வப்போது வீட்டை விட்டு சென்று மீண்டும் வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த நான்காம் தேதி தாய் மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு சென்ற வசந்தி மீண்டும் வீடு திரும்பவில்லை.அவரை உறவினர்கள் வீடு நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் அவர் குறித்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கே.கே. நகர் கேகே நகர் காவல் நிலையத்தில் இளங்குமாறன் அளித்த புகாரின் பேரில் கேகே நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மூதாட்டியை தேடி வருகின்றனர்.

