பல காமெடி வீடியோஸ்,ரீல்ஸ் இந்த பையனை பார்த்திருப்போம்.
பெயர் அருண்..தெலுங்கானாவை சேர்ந்த பையன், வறுமையால் நான்காம் வகுப்பு மட்டுமே படித்து,
லாரி க்ளீனிங் வேலைக்கு சேர்ந்திருக்கிறான்.
நேரு என்ற டிரைவரிடம் வேலைப்பார்க்கும் போது அவரது காமெடிக்கு இந்த பையன் சிரிக்க,
அவர் வீடியோ எடுத்து வெளியிட பையனின் சிரிப்பு சூப்பர் ஹிட்.
அத்தோட அவனது கல்வித்தகுதியை நேரு பத்தாவதும் படிக்க வைத்து மாற்றியிருக்கிறார்.
“இவ்வளவு பேர் என் சிரிப்பை ரசிப்பாங்கன்னு நான் கனவுலயும் நினைக்கல.
வறுமையோட வலில இருந்தப்போ, அந்த ஒரு நொடி சிரிப்பு என் வாழ்க்கையை மாத்திருச்சு
நேரு அண்ணா எனக்கு கடவுள் மாதிரி. அவர் வற்புறுத்தலைன்னா 10வது படிச்சுருக்கவும் மாட்டேன்.
வீடியோ எடுக்குறது மட்டுமல்லாமல், நல்லா படிச்சு மரியாதைக்குரிய வேலையைச் செய்யனும்., அவரைப் போலவே வறுமையில கஷ்ட படுற குழந்தைகளுக்கு உதவவும்னு ஆசை… ”
என்று சொல்லிருக்கிறான் தம்பி அருண்.
வாழ்க்கை எப்படில்லாம் ஆச்சர்யத்தை, மாற்றத்தை நமக்காக வைத்து குடுக்கிறது பாருங்கள்.
நாளைக்கே அனைத்தும் மாறும்..அல்லது மாற்றத்திற்கான விதையாவது விதைக்கப்படும்.
எல்லாமே நம்பிக்கை தான் .

