திருச்சி ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதிகளில் போதை மாத்திரைகள்
விற்ற சிறுவன்,சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது.
சிக்கிய சிறுவன் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைப்பு.
திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக மாநகரப் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து அந்தந்த பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஸ்ரீரங்கம் மயானம் அம்பேத்கர் நகர் அருகே போதை மாத்திரை விற்ற திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி ரகுபதி ( வயது 25, ) ரங்கநாதன் (வயது 25), மூலத் தோப்பு பகுதியை சேர்ந்த தினேஷ் பாபு (வயது 29 )ஆகிய 3 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுடன் இருந்த 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். இவர்களிடம் இருந்து 50 போதை மாத்திரைகள், பாட்டில், 4 பஞ்சு உருளைகள், இரண்டு செல்போன்கள் மற்றும் இரண்டு டூவீலர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காந்தி மார்க்கெட் காமராஜ் நகர் அருகே போதை மாத்திரை விற்ற வடக்கு தாராநல்லூரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு ரவுடி படையப்பா (வயது 26 ) என்ற வாலிபரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.அவரிடம் இருந்து 15 போதை மாத்திரைகள் இரண்டு ஊசிகள் மற்றும் ஒரு பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலக்கரை தேவாலயம் அருகே போதை மாத்திரை விற்ற பாலக்கரை முதலியார் சத்திரத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 26) மற்றும் செபாஸ்டின் சுனில் (வயது 24) ஆகிய இரண்டு பேரை பாலக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து எட்டு போதை மாத்திரைகள் இரண்டு ஊசி மற்றும் ஒரு பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது .
இதே போல வயலூர் சாலை எம் எம் நகர் அருகே போதை மாத்திரை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த தன்சீர் அகமது (வயது 21 ) என்ற வாலிபரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர் அவரிடம் இருந்து 8 போதை மாத்திரைகள் இரண்டு ஊசிகள் மற்றும் இரண்டு பாட்டில்கள் ஒரு டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது பின்னர் அவரை ஜாமினில் விடுதலை செய்துள்ளனர்.

