பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தம்.திருச்சியில் பஸ் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கியது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தம்.
திருச்சி மாவட்டத்தில் 20 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல்.3000 பேர் கைது. பஸ்,ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது.
தொழிலாளர் சட்ட தொகுப்பு அமலாக்கப்படுவதாக 21.11.2025ல் வெளியிட்ட அறிவிப்பினை திரும்ப பெற வேண்டும். ஆட்டோ, கட்டுமானம், சுமைப் பணி, தரைக்கடை, அமைப்புசாரா , ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்வோர் உள்ளிட்ட முறை சாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதி ஆணையத்தை உருவாக்க வேண்டும். நல வாரியங்களை சீர்படுத்த பணப்பயணங்களை கூடுதலாக உடனுக்குடன் வழங்க வேண்டும். 100 நாள் திட்டத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதோடு அறுவடை காலங்களில் வேலை தரக்கூடாது என்றும் வேலை தருவதை மத்திய அரசின் உரிமையாக்குவதோடு நிதியை வெட்டி சுருக்கி திட்டத்தை சீரழிப்பதை கைவிட வேண்டும். விவசாயிகளையும், விவசாயத்தையும் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அடகு வைக்கும் விதைச்சட்டம் 2025 திரும்பப் பெற வேண்டும்.
பாரம்பரிய விவசாயத்தை பறித்து மரபு விதைகளை அழிக்கும் கார்ப்பரேட் முதலாளிய ஆதரவு விதை மசோதா 2025ஐ ரத்து செய்ய வேண்டும்.
அணுசக்தி மின்சாரத்துறையில் தனியார் முதலாளிகளை அனுமதிக்கும் 2025 சாந்தி மசோதாவை ரத்து செய்ய வேண்டும். ரயில்வே, எல்ஐசி போன்ற பொதுத்துறைகளில் தனியார்மயத்தை புகுத்தி அரசு பணிகளை காண்ட்ராக்ட் மயமாக்குவதை கைவிட வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திருத்தங்களை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி சார்பில் ஸ்ரீரங்கத்தில் ரயில்மறியல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு சிஐடியு தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட. சிஐடியு நிர்வாகிகள் ஜெமினி, கோவிந்தன், சுப்பிரமணி, ரகுபதி, ஏஐடியுசி நிர்வாகிகள் ராமராஜ், சொக்கி சண்முகம், அன்சர் தீன், பார்வதி உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக ராஜகோபுரத்தில் இருந்து ஊர்வலமாக வந்து கடலூர் பயணிகள் ரயிலை மறித்தனர்.அப்போது மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் .இதே போல் திருச்சி மாவட்டத்தில் புறநகர் பகுதியில் சோமரசம்பேட்டை, திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, தொட்டியம், முசிறி, துறையூர், தாப்பேட்டை உப்பிலியபுரம், மண்ணச்சநல்லூர் மேற்கு, கிழக்கு, லால்குடி புள்ளம்பாடி ஆகிய 18 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.இந்த மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.இதே போன்று திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஒன்றாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் பெரியார் சிலையில் இருந்து தொழிற்சங்கத்தினர் ஊர்வலமாக ரயில் நிலையம் நோக்கி சென்றனர்.அங்கு ரயில் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு இச்சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஜங்ஷனில் நடந்த மறியல் போராட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தொ.மு.ச. ஜோசப் நெல்சன்,குணசேகரன்,எத்திராஜ்,சி.ஐ.டி.யு ரெங்கராஜன்,ஏ. ஐ. டி . யூ.சி சுரேஷ்,
ஐ.என்.டி யு.சி. வெங்கட்நாராயணன், எஸ்.ஆர் ஆறுமுகம், எல்.எல்.எப். தெய்வீகன், ஏ.ஐ.சி.சி.டி.யு.சி ஞானதேசிகன், யு.டி.எஸ். சிவசெல்வம், எச்.எம்.எஸ். ஜான்சன், விவசாய தொழிலாளர் சங்கம் அயிலை சிவ சூரியன் ஆகிய தொழிற்சங்க நிர்வாகிகள் தலைமை தாங்கினர்.
இப்போது கோஷங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர்.சிலர் ரயில் நிலையம் நோக்கி உள்ளே செல்ல முயன்றனர்.அப்போது போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்களை கைது செய்தனர்.சிலர் ரயில் நிலையம் உள்ளே தண்டவாளத்தில் அமர்ந்து ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்தில்
மொத்தம் திருச்சி மாநகர், திருவரங்கம் உள்பட 20 இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.திருச்சி மாவட்டம் முழுவதும் நடந்த இந்த மறியல் போராட்டத்தில் சுமார் 3000 பேர் கைது செய்யப்பட்டனர்.இது நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. வங்கி பணிகள்,பெல் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவன பணிகள் பாதிக்கப்பட்டன.ஆனால் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின.சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் ஆட்டோக்களை இயக்கவில்லை .
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

இதேபோல் வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனால் வழக்கமான நேரடி பண பரிவர்த்தனை உள்ளிட்ட வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.திருச்சி பெண் நிறுவன ஊழியர்கள் மற்றும்
பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

