Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா.மாநில தலைவர் எம்.கே . கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற உள்ளது.

0

'- Advertisement -

திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா

மாநிலத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் நாளை நடைபெற உள்ளது

தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா

நாளை (11-ந்தேதி)திருச்சி ஜங்ஷன் பாரதியார் சாலை நல்லி சில்க்ஸ் மாடியில் நடக்கிறது.

விழாவிற்கு மாநில தலைவரும்,

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில இணை செயலாளருமான எம். கே.கமலக்கண்ணன் தலைமை தாங்கி விழாவை நடத்துகிறார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் மலேசியா மணி,

மாநில செயலாளர் ஆர். ஸ்டாலின்,

மாநில கூடுதல் செயலாளர் டி. .பக்கிரி சாமி,வடிவேல் மாணிக்கம், ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

விழாவில்

ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்கள் ,

நில வணிகர்கள்,

நில முகவர்கள்,

காவல்துறை உயர் அதிகாரிகள்,

அரசியல் கட்சி பிரமுகர்கள் ,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் ,

சமுதாய தலைவர்கள், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள்,

பிரஸ் கிளப் நிர்வாகிகள் ,திருச்சி மாநகராட்சி அரசு அலுவலர்கள் சங்க நிர்வாகிகள்,

தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்க நிர்வாகிகள் ,

திருச்சி மாவட்ட நான்கு சக்கர வாகன சங்க ஆலோசகர்கள்,

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், என பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதுவரை வீதிகளிலும், டீக் கடைகளிலும் வியாபாரம் பேசி வந்த நில முகவர்கள் சங்க உறுப்பினர்கள் இனி தங்களுடைய அலுவலகமாகவே செயல்படுத்தலாம். அலுவலகம் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

தங்களுடைய வாடிக்கையாளர்களை அழைத்து வந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள டேபிள் சேரில் அமர்ந்து வியாபாரம் பேசலாம். அதற்காகவே நமது சங்க அலுவலகம் நாளை திறக்கப்பட உள்ளது.

திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மாநில தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.