Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

யாருடன் போயிட்டு வருகிறாய்? துவாக்குடி அரசு கலைக்கல்லூரி முதல்வரின் கொச்சையான பேச்சை கண்டித்து மாணவ மாணவிகள் போராட்டம்.

0

'- Advertisement -

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில், கல்லூரிக்கு வருகை தரும் மாணவிகளை தொடர்ந்து இழிவாகவும் கொச்சையாகவும் பேசி வரும் கல்லூரி முதல்வர் சத்தியா அவர்களை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் (SFI) சார்பில் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

தினந்தோறும் கல்லூரிக்கு வருகை தரும் மாணவிகளை வெளியே நிற்க வைத்து, தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவிகள் பயன்படுத்தக்கூடிய ஓபன் டாப் அணியக்கூடாது அம்பர்லா டாப் மட்டுமே அணிய வேண்டும் அப்பொழுது தான் உனக்கு பாதுகாப்பு என்றும் இல்லையென்றால் மாணவர்கள் உங்களை கேலி செய்வார்கள் என்றும் பாலியல் துன்புறுத்தல்கள் எதுவும் நடக்காது என்றும்

“உன் ஆடை சரியாக இல்லை”, “நீ ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருக்கிறாயா?”, “யாருடன் போயிட்டு வருகிறாய்?”, “நீ கல்லூரிக்கு வந்திருக்கிறாயா அல்லது ஷாப்பிங் வந்திருக்கிறாயா?”

என இழிவாகவும் அவமதிப்பாகவும் பேசும் செயல்களில் முதல்வர் சத்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மாணவ மாணவிகள் குற்றம் சாட்டினர்.

 

இதனை கண்டித்து, அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

 

இந்தப் போராட்டம், இந்திய மாணவர் சங்கத்தின் கிளைத் தலைவர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்டத் தலைவர் வைரவளவன் மாவட்டச் செயலாளர் ஆமோஸ், கல்லூரி கிளைச் செயலாளர் துளசிராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தக் உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.