திருச்சி மன்னார்புரத்தில்தீயில் கருகி பெண் பரிதாப சாவு .
திருச்சி மன்னார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சியாமளா தேவி (வயது 62) கடந்த 30 ந்தேதி ஷீலா தேவி வீட்டில் சாமி கும்பிட விளக்கை ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அவரது நைட்டியில் தற்செயலாக தீ பிடித்தது இந்த தீ சிறிது நேரத்தில் உடல் முழுவதும் வேகமாக பரவி பலத்த காயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் உள்ள உறவினர்கள் அவரை உடனடியாக அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சியாமளாதேவி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

